மதுரை: மதுரை மேலூர் அருகே கத்தப்பட்டியில் தனியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான பள்ளி உள்ளது. இங்கு பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள் தங்கிப் பயில்கின்றனர்.
இங்குள்ள மாணவர்களில் பிஹாரைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும், 13 வயது சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 13 வயது சிறுவன் சமையலுக்குப் பயன் படுத்தும் கத்தியை எடுத்து, 10 வயது சிறுவனை குத்திக் கொலை செய்துவிட்டு, சடலத்தை கழிவுநீர் தொட்டியில் போட்டுவிட்டு, வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளான்.
நேற்று முன்தினம் முதல் விடுதிக்கு வராத 10 வயது சிறுவனைக் காணவில்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் மேலூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், தனது தாயை தவறாகப் பேசியதால் கத்தியால் குத்தி கொலை செய்ததாக, 13 வயது சிறுவன் ஒப்புக்கொண்டான்.
பின்னர், 10 வயது சிறுவனின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
» துறை செயலர்கள் பேச்சுவார்த்தை எதிரொலி: முடிவுக்கு வந்த போக்குவரத்து ஊழியர் - காவலர் மோதல்
» உதகையில் ஆளுநர் தலைமையில் பல்கலை. துணைவேந்தர்கள் மாநாடு: நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது
மேலும், கொலை செய்த13 வயது சிறுவனை கைது செய்து, சிறுவர்கள் கூர்நோக்கு மையத்துக்கு அனுப்பிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago