சென்னை: ரூ.11.79 கோடி மோசடி வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் மகளிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை வால்டாக்ஸ் சாலை யில் பி.வி.சி. பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றுஇயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஆந்திரா மாநிலம் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி.எஸ்.பி.ஒய். ரெட்டிக்கு சொந்தமான நிறுவனம், பொருட்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி சென்னை நிறுவனத்தில் இருந்து 2019-ம்ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை ரூ.11 கோடியே 79 லட்சத் துக்கு பி.வி.சி. பொருட்கள் கொள் முதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த பொருட்கள் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டை கூறி சென்னை நிறுவனத்துக்கு பணத்தை தராமல் இருந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த நிறுவனம் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை நிர்வகித்து வரும் முன்னாள் எம்.பி. ரெட்டியின் மகள் சுஜாலா மற்றும் காந்த் ரெட்டி, தர் ரெட்டி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில் அவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘ரூ.11.79 கோடி மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்த தீர்ப்பில், ‘இந்த வழக்கு விசாரணையை 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்’ என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட் டது. இதையடுத்து இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும் கையில் எடுத்தனர். காவல் உதவி ஆணையர்ரித்து தலைமையில், ஆய்வாளர்செர்லின் பெமீலா மற்றும் போலீஸார்அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் ஆந்திரா முன்னாள் எம்.பி. ரெட்டியின் மகள் சுஜாலாவை ஐதராபாத்தில் இருந்துசென்னை அழைத்து வந்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் எனக் கூறி அவரை திருப்பி அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago