சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்ற விவகாரம் தொடர்பாக ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது அவரது சகோதரரிடமும் அமலாக்கத் துறை நேற்று விசாரணை மேற்கொண்டது.
இதுதொடர்பாக ஜாபர் சாதிக்கை டெல்லி என்சிபி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.இந்நிலையில், அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் 9-ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, ஹோட்டல்கள், திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில் பல்வேறு குற்ற ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் ஜாபர் சாதிக் மனைவி அமீனாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்அனுப்பியது.
அதனடிப்படையில், ஜாபர் சாதிக் மனைவி நேற்றுமுன்தினம் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் வரை கிடுக்கிப்பிடி விசாரணைநடத்தினர்.
» வாக்குகளுக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதா? - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
முன்னதாக அமீரின் சகோதரரான (தம்பி) முகமது சலீம் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் செயல்பட்டு வந்த அவரை அக்கட்சி தலைமை ஏற்கெனவே நீக்கி இருந்தது. இந்நிலையில், சலீம் நேற்று காலை 11 மணியளவில் ஆஜரானார்.
அவரிடம், போதைப் பொருள் வழக்கு குறித்தும், ஜாபர் சாதிக்கின் செயல்பாடு, அணுகுமுறை, பின்னணி, தொடர்பு, பணப்பரிவர்தனை, தொழில் விவகாரம் உட்படபல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டுள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில் மீண்டும் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்தது. இது இரவு வரை நீடித்தது.
ஜாபர் சாதிக்கின் மனைவி மற்றும் சகோதரர் அளித்த வாக்குமூலம் மற்றும் தகவல்களின் அடிப்படையில் மேலும் சிலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
4 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago