போக்சோ வழக்கில் கைதான கேரள இளைஞர் தப்பியோட்டம் @ கிருஷ்ணகிரி

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: போக்சோ வழக்கு தொடர்பாக டெல்லியில் கைதான கேரள மாநிலஇளைஞரை ஆம்னி பேருந்தில்கேரளாவுக்கு அழைத்துச் சென்றபோது, வழியில் கிருஷ்ணகிரி அருகே தப்பியோடினார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் வடசேரிக்காரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சச்சின் ரவி(28).புகாரின் பேரில் இவர் மீது கடந்த2023-ம் ஆண்டு போக்சோ மற்றும்தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பத்தனம்திட்டா சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவானார். இதுதொடர்பாக விமான நிலையங்களுக்குக் கேரள மாநில போலீஸார், ‘லுக்அவுட்’ நோட்டீஸ் அளித்தனர்.

இதனிடையே, கடந்த 18-ம் தேதிசவுதி அரேபியாவிலிருந்து விமானம்மூலம் சச்சின் ரவி டெல்லி வருவதாக பத்தனம்திட்டா சைபர் க்ரைம்போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜோபின் ஜார்ஜ் தலைமையிலான போலீஸார் டெல்லி சென்று விமான நிலையத்தில் சச்சின் ரவியைக் கைது செய்தனர்.

அங்கிருந்து விமானம் மூலம்கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அவரை அழைத்து வந்தனர்.அன்று இரவு பெங்களூருவிலிருந்து கேரளாவுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் அவரை அழைத்து வந்தனர்.

நேற்று முன்தினம் அதிகாலை12.30 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பையூர் மேம்பாலம் அருகில் ஆம்னிபேருந்து வந்தபோது, இயற்கை உபாதை கழிக்க பேருந்தில் இருந்துஇறங்கிய சச்சின் ரவி, தப்பியோடிதலைமறைவானார். இதுதொடர் பாக கேரள மாநில சைபர் க்ரைம் போலீஸார் அளித்த புகாரின் பேரில்விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்