சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 9-ம் தேதி தென் அமெரிக்கா பொலிவியாவில் இருந்து வந்த விமானத்தில் பொலிவியா நாட்டு பெண் பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த பெண் அணிந்திருந்த கம்பளி ஆடைக்குள் 10-க்கும் மேற்பட்ட பொட்டலங்களில் 1.8 கிலோ போதைப் பொருள்மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பிரேசில் நாட்டு இளம்பெண், இந்திய பெண் என 2 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம் 15 கிராம் போதைப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட் டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், மூவரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், நெதர்லாந்து நாட்டில் இருந்து சரக்கு விமானத்தில் வந்த பார்சலை பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். அந்த பார்சலில் 1.4 கிலோ எம்டிஎம்ஏ (போதை மாத்திரை) எனப்படும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த பார்சலில் இருந்த முகவரியை வைத்து, புதுச்சேரி மற்றும் பெங்களூரு சென்ற அதிகாரிகள் அங்கு நைஜீரிய நாட்டை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.22 கோடி என்றும் கடத்தல் பின்னணி குறித்தும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago