ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காருக்குள் தற்கொலை @ கம்பம்

By செய்திப்பிரிவு

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில், கேரளாவைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும்மகன் ஆகியோர் காருக்குள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

கம்பத்தில் இருந்து கேரளா செல்லும் நெடுஞ்சாலையில், சேனைஓடை அருகே கேரள பதிவெண் கொண்ட கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதில் 3 பேர் இருக்கையில் சரிந்தபடி இறந்து கிடந்தனர். அவ்வழியாக காட்டு வேலைக்குச் சென்ற சிலர்,இதைப் பார்த்துவிட்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் அங்கு சென்று சோதனையிட்டபோது, இறந்தவர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கேரள போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், இறந்தவர்கள் கோட்டயத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஜார்ஜ் சக்காரியா (60),அவரது மனைவி மெர்சி (56), மகன் அகில்ஜார்ஜ் (29) என்பதும், தொழில் நஷ்டம், கடன் தொல்லை காரணமாக காருக்குள்ளேயே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து, மூவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தற்கொலை தொடர்பாக கம்பம் காவல் ஆய்வாளர் இளையராஜா வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்