மரக்காணம் அருகே பள்ளி மாணவி மாயம்: போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் தாய் தற்கொலை

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: மரக்காணம் அருகே காணிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கர வர்த்தி (38). விவசாயியான இவரது 17 வயது மகள் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி கடந்த 9-ம் தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியான பெற்றோர், இது குறித்து மரக்காணம் போலீஸில் புகார் கொடுத்தனர்.

அதில், அதேபகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் தான் தனது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டார். எனவே அவரிடமிருந்து மகளை மீட்டுத் தருமாறு குறிப்பிட்டிருந்தனர். ஆனால் போலீஸார் இப்புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் மாணவியின் தாய் வனிதா (35) நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலறிந்த மரக்காணம் போலீஸார் மரக்காணம் அரசு மருத்துவமனையில் இருந்த வனிதாவின் உடலை கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்ப டைத்தனர்.

இதைத் தொடர்ந்து உறவினர்கள் நேற்று காலை வனிதாவின் உடலை மரக்காணம் - திண்டிவனம் சாலையில் கந்தாடு கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வைத்து சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த மரக்காணம் போலீஸார் அங்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவியை கடத்திச் சென்றது மட்டுமல்லாமல், மாணவி யின் தாயின் தற்கொலைக்கு காரணமான கோபியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது போலீஸார் தலைமறைவாக உள்ளகோபியை கைது செய்ய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு வனிதாவின் உடலையும் எடுத்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்