மதுரை: மதுரை அருகே பெண் காவல் ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதில், 450 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை அருகே அலங்காநல்லூர் சாலையில் உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா(42). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விளாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் உதய கண்ணன், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு ஷர்மிளா பணி முடிந்து வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.
தகவலறிந்த டிஎஸ்பி கிருஷ்ணன், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் மன்னவன் ஆகியோர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் ஏடிஎஸ்பி முருகானந்தம் தலைமையிலான நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர்.
கொள்ளை நடந்த வீட்டைப் பார்வையிட்ட பிறகு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கூறியது:
ஆய்வாளர் ஷர்மிளா வீட்டில் கடந்த சில நாட்களாக மராமத்துப் பணிகள் நடந்துள்ளன. ஷர்மிளா பணிக்குச் சென்றபோது, அவரது தாயார் வீட்டிலிருந்து மராமத்துப் பணிகளை மேற்பார்வையிட்டு வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தாயார் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இதைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஷர்மிளா அளித்த புகாரின் பேரில் 250 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை போனதாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஷர்மிளாவின் வீட்டில் கடந்த சில நாட்களாக பெயின்ட் அடிக்கும் பணியும், தச்சு வேலைகளும் நடந்து வருகின்றன. இதில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வேலை பார்த்துள்ளனர். இதனால், ஷர்மிளா வீட்டில் நகைகள், பணம் இருப்பதைநன்கு அறிந்த நபர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இதனால், பெயின்ட் அடிக்கும் தொழிலாளர்கள் மற்றும் தச்சுத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும், வெளியூர் நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புகார் மனு: காவல் ஆய்வாளர் ஷர்மிளா முதலில் அளித்த புகார் மனுவில் 250 பவுன்நகை கொள்ளை போனது என தெரிவித்திருந்தார். பின்னர், போலீஸார் நடத்திய விசாரணையின்போது 450 பவுன்நகை கொள்ளை போனதாக அவர் தெரிவித்தார் என தகவல் வெளியானது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago