சென்னை | சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 11 கிலோ கஞ்சா கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9-வது நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 11 கிலோ கஞ்சாவை ரயில்வேபோலீஸார் கண்டுபிடித்து விசாரித்து வருகின்றனர்.

பல்வேறு வடமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்தடையும் விரைவு ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒடிஸா மாநிலம் பூரியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு விரைவு ரயில் நேற்று முன்தினம் மாலை வந்தது. அந்த ரயிலில் இறங்கி வந்தவர்களை ரயில்வே போலீஸார் கண்காணித்து வந்தனர்.

அப்போது, அந்த நடைமேடையில் ஒரு டிராவல் பேக் கேட்பாராற்று கிடைந்தது. அதை போலீஸார் திறந்து பார்த்தபோது, 11 கிலோ எடை கொண்ட கஞ்சாபொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்புரூ.2.20 லட்சம் ஆகும். இதையடுத்து, கடத்தி வந்த நபர் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE