புகையிலை பொருட்களை காரில் கடத்திய மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரின் கணவர் கைது

By செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே புகையிலைப் பொருட்களை காரில் கடத்திச் சென்ற, தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

சிவகிரி அருகே காரில் புகையிலைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக சிவகிரி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகிரி அருகேயுள்ள தென்மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவுபோலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டனர்.

அதில் 600 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருட்கள் மற்றும் காரைப் போலீஸார் பறிமுதல் செய்து, காரில் இருந்த 2 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ஊத்துமலை அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (51), அவரதுகார் ஓட்டுநர் லாசர் (35) என்பது தெரியவந்தது.

திமுக உட்கட்சி பூசல்: சுபாஷ் சந்திரபோஸ், தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் தமிழ்ச்செல்வியின் கணவர். திமுக உட்கட்சிப் பூசலில், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தவர் தமிழ்ச்செல்வி.

இந்நிலையில், அவரது கணவர் புகையிலைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

50 mins ago

க்ரைம்

4 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்