சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 2 இளைஞர்களை கைது செய்தது மும்பை போலீஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் அவர்கள் தப்பியோடினர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக விக்கி குப்தா (24), சாகர் பால் (21) என்ற இரு இளைஞர்களை கைது செய்த மும்பை காவல் துறை, அவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் மும்பை அழைத்து வரப்பட்டனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “விக்கி குப்தா இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். வாகனத்தின் பின்புறத்தில் இருந்த சாகர் பால், சல்மான் கான் வீட்டின் அருகே சுட்டார். அவர்கள் சல்மான் கானைக் கொல்லும் இலக்கில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் என்ன நோக்கத்திற்காக சுட்டனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

23 mins ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்