மதுரை: ஈரோடு பிகேகேஎன் சாலையைச் சேர்ந்தவர் நவ்ரோஜ். இவர் சென்னையில் வசித்தபோது, சினிமா துறையைச் சேர்ந்த பிரபுஎன்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபு மூலம் சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த ரகுநாதன், அவரது தம்பியும், நடிகருமான சந்திரன் ஆகியோருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரகுநாதன் தனது தம்பி சந்திரனை கதாநாயகனாக வைத்து புதிய திரைப்படம் எடுக்கப்போவதாகக் கூறி, நவ்ரோஜிடம் வட்டிக்குப் பணம் கேட்டுள்ளார். இதை நம்பிய நவ்ரோஜ் முதலில் ரூ.50 லட்சம், பின்னர் அவரது தம்பி நரேந்திரன் மூலம் ரூ.53 லட்சம், நண்பர்கள் ராஜ்குமார், கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து தலா ரூ.15 லட்சம் மற்றும் ஃபைனான்சியர் ஜான் என்பவர் மூலமாக ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1.83 கோடியை கொடுத்துள்ளனர். இதில் ரூ.42.94 லட்சம்மட்டும் வங்கி மூலம் அனுப்பிஉள்ளனர்.
ஆனால் ரகுநாதன் தரப்பினர் படம் எடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், பணத்தை திருப்பித் தராததுடன், நவ்ரோஜுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து நவ்ரோஜ், மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், புதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
பின்னர் இந்தப் புகார் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், சென்னை ஆர்.ஏ.புரம் விசுவநாதன் தெருவைச் சேர்ந்த ரகுநாதன், நடிகர் சந்திரன் மீதுமோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொடுத்தகடன் தொகையில் ரூ.38.29 லட்சம்திருப்பி தந்துவிட்டதாகவும், கூடுதல் வட்டி கேட்டு ஆட்களை வைத்து நவ்ரோஜ் மிரட்டியதாகவும் ரகுநாதன் புகார் அளித்தார்.
» இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் 30 லட்சம் காலி பணியிடம் நிரப்பப்படும்: ராகுல் காந்தி உறுதி @ கோவை
» ஊழலை சட்டப்பூர்வமாக்கியது பாஜக: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
அதன்பேரில், ஈரோடு நவ்ரோஜ், மூர்த்தி, ஜான், ராஜ் உள்ளிட்ட 5 பேர் மீதும் நீதிமன்ற உத்தரவின்பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago