திரைப்பட இயக்குநரிடம் ரூ.3 லட்சம் கையாடல்: உதவி இயக்குநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல திரைப்பட நடிகர் மம்முட்டி மகன் பட இயக்குநரிடம் ரூ.3 லட்சம் கையாடல் செய்ததாக, உதவி இயக்குநர் மீது அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி. சென்னை அண்ணா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகி, அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

வரவு, செலவு கணக்கு: தேசிங் பெரியசாமியிடம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் உதவி இயக்குநராக முகமது இக்பால் என்பவர் இருந்துள்ளார். இவர், அவரது அனைத்து விதமான வரவு செலவு மற்றும் பண பரிவர்த்தனைகளையும் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் தேசிங் பெரியசாமி, தனது 150 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து பணம் பெற்று வரும்படி முகமது இக்பாலிடம் கூறினாராம்.

மோசடி, மிரட்டல் வழக்கு: ஆனால், நகைகளுடன் சென்ற இக்பால் அதை அடமானம் வைத்து பெற்ற தொகை ரூ.3 லட்சம் ரொக்கத்தை தேசிங் பெரியசாமியிடம் ஒப்படைக்காமல் கையாடல் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசியதோடு, தேசிங் பெரியசாமி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த தேசிங் பெரியசாமி இந்த விவகாரம் குறித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து உதவி இயக்குநர் முகமது இக்பாலை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்