செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் ஜோதி நகர்-5-வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (48). இவர், கடந்த ஆண்டு கஞ்சா வழக்கு தொடர்பாக மதுரை அருகே உள்ள திருப்பாலை போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பரமேஸ்வரனின் தந்தை ஆறுமுகம் சமீபத்தில் உயிரிழந்தார். ஆகவே, தந்தையின் 16-ம் நாள் காரியத்துக்கு பரோல் கேட்டு நீதிமன்றத்தில் பரமேஸ்வரன் விண்ணப்பித்தார். இதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு 2 நாட்கள் பரோல் வழங்கியது.
இதையடுத்து, நேற்று முன் தினம் மதுரை சிறையில் இருந்து ஓர் உதவி ஆய்வாளர் மற்றும் 6 போலீஸாரின் பாதுகாப்புடன், பரமேஸ்வரன் பாடியநல்லூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 16-ம் நாள் காரியத்தின் போது, யாரும் கவனிக்காத நேரத்தில் பரமேஸ்வரன், தப்பியோடிவிட்டார். செங்குன்றம் போலீஸார், பரமேஸ்வரனை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago