சென்னை: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜன் (29). இவர் பெருங்குடியில் உள்ளஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணி செய்தார். அதே பகுதியில் நண்பர்களுடன் வாடகை அறையில் தங்கி இருந்தார். இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் இந்த விளையாட்டில் அவர் பல லட்சம் ரூபாயை இழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க, கடன் வாங்கி அந்த பணத்தை வைத்து அதன் மூலமும் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக தெரிகிறது. அதிலும் பணத்தை இழந்ததாகவும் இதனால் கடன் தொல்லைஅதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு அவர் தங்கி இருந்த அறையில் நண்பர்கள் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
» போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்: டெல்லியில் நாளை ஆஜராக உத்தரவு
அறைக்கு திரும்பிய நண்பர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் சம்பவ இடம்விரைந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் குருராஜன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago