சென்னை | சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சொத்து தகராறில் தந்தையைக் கொலை செய்ததாக மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை வில்லிவாக்கம், ராஜமங்கலம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் மதுசூதனன்(60). இவர்நேற்று முன்தினம் மாலை தனதுவீட்டிலிருந்தபோது, அங்குவந்த அவரது மகன் ஜார்ஜ் புஷ்(32), வீட்டை தனது பெயருக்கு எழுதிதரச்சொல்லி தகராறு செய்துள்ளார்.

தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ஜார்ஷ் புஷ், இரும்பு கம்பியால் தந்தை மதுசூதனனை பலமாகத் தாக்கியுள்ளார். மேலும்,எரிவாயு சிலிண்டரை எடுத்து மதுசூதனன் மீது போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மதுசூதனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, ஜார்ஜ் புஷ் அங்கிருந்து தப்பி சென்றார். தகவல் அறிந்து ராஜமங்கலம் காவல் நிலைய போலீஸார் சம்பவஇடம் விரைந்தனர். மதுசூதனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்தஜார்ஜ் புஷ்ஸைக் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப் பட்ட இரும்பு கம்பி, சிலிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்