சென்னை: தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்த வழக்கில் கைதான 4 பேரை 10 நாட்கள்காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக கோயம்புத்தூரைச் சேர்ந்த சையது அப்துல் ரகுமான் (53), இர்ஷாத் (32), முகமதுஉசேன் (38), ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜமீல் பாட்சாஉமரி (55) ஆகிய 4 பேரை கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
யார் யாருக்கு தொடர்பு? - இதற்கிடையே பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது, இவர்கள் எந்த அமைப்பில் இணைந்து செயல்பட்டார்கள் என்பது குறித்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் மனுவைவிசாரித்த நீதிபதி இளவழகன் 4 பேரையும் 10 நாட்கள் காவல் வைத்து விசாரிக்க என்ஐஏ போலீஸாருக்கு அனுமதி அளித்தார்.
» மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட மேனகா, வருண் காந்திக்கு வாய்ப்பு மறுப்பு
» உ.பி.யில் நடந்த திருமணத்தில் மணமகன் வராததால் அரசு நிதி பெற அண்ணனை மணந்த பெண்
போலீஸ் காவல் முடிந்துவரும் 28-ம் தேதி 4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தர விட்டார். இதையடுத்து 4 பேரையும் விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago