ஓசூர் திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர் வந்த போலீஸ் வாகனத்தை காரில் துரத்திய 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் அருகே திமுக பிரமுகர்கொலை வழக்கில் கைதானவரைஅழைத்து வந்த போலீஸ் வாகனத்தை காரில் ஆயுதங்களுடன் துரத்திய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்,

கிருஷ்ணகிரி மாவட்டம்பேரிகையைச் சேர்ந்தவர் கார்த்திக் (35).இவர் சூளகிரி வடக்கு ஒன்றியதிமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில் செய்து வந்தார்.

மர்ம நபர்கள் தாக்குதல்: இந்நிலையில், கடந்த 15–ம் தேதி பேரிகையிலிருந்து சூலகுண்டா வழியாக அவர் காரில் வந்தபோது, எதிரே காரில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.

இதில் படுகாயமடைந்த கார்த்திக்கை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக பேரிகை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், தனிப்படையினரும் தேடி வந்தனர்.

நிலப்பிரச்சினை: விசாரணையில், கர்நாடக மாநிலம் அனிகிரிப்பள்ளியைச் சேர்ந்த பிரதாப் (25) என்பவருக்கும், கார்த்திக்கும் இடையில் இருந்த நிலப்பிரச்சினை தொடர்பான முன்விரோதத்தில் கார்த்திக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த பிரதாப்பை நேற்றுமுன்தினம் (மார்ச் 17) தனிப்படை போலீஸார் கைது செய்து, பேரிகை காவல் நிலையத்துக்கு ஜீப்பில் அழைத்து வந்தனர்.

அப்போது, போலீஸ் ஜீப்பைகார் மற்றும் இருசக்கர வாகனத்தில்20 பேர் பின் தொடர்ந்து வந்தனர். இதை பார்த்த போலீஸார் அவர்கள் வந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது, 15 பேர் தப்பி ஓடினர்.

காரில் ஆயுதங்கள்: போலீஸாரின் பிடியில் சூளகிரிஅருகே நெரிகத்தை சேர்ந்த திருமல்லேஷ் (21), பெங்களூருவைச் சேர்ந்த மணிவெங்கட்ராமப்பா (33). வெங்கடேஷ், (38),பேரிகை சாதீப் (21), பிரவீன்குமார் (26) ஆகிய 5 பேர் சிக்கினர். விசாரணையில், அவர்கள் அனைவரும் கார்த்திக்கின் கூட்டாளிகள் என்பதும், பிரதாப்பைக் கொலை செய்ய காரில் துரத்தி வந்ததும், காரில் ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆயுதங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸார் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

23 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்