பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே தனியார் பள்ளிவாகனத்தில் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவாகன கிளீனர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு மாணவிகள் பலர், பள்ளி வாகனத்தில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளி வாகனத்தில் கிளீனராக பணிபுரிந்து வந்த நசரத்பேட்டையை சேர்ந்த ஞானசேகர்(32), சில தினங்களாக வாகனத்தில் பயணிக்கும் இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று ஞானசேகரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago