புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை வழக்கில் கைதான இருவரிடமும் ரத்த மாதிரி சேகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த 9 வயதான பள்ளிச் சிறுமி கடந்த 2-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

இக்கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் ( 56 ), கருணாஸ் ( 19 ) ஆகியோர் முத்தியால்பேட்டை போலீஸாரால் கைது செய்யப் பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறை வளாகத்துக்கே நீதிபதி சென்று, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தற்போது காலாப்பட்டு சிறையில் இருவரும் உள்ளனர். சிறுமி கொலையானது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கில் கைதானவர்களை வழக்கம் போல போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்றே, சிறையில் உள்ள 2 பேரிடமும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இச்சூழலில் தடயங்கள், ஆவணங்களை சீலிட்டு நீதிமன்றத்தில் போலீஸார் சமர்ப்பித்தனர். இதற்கிடையே புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் முத்தி யால்பேட்டை போலீஸார் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், சிறையில் உள்ள இருவரின் ரத்த மாதிரிகளைச் சேகரிக்கவும், கை ரேகைகளைப் பதிந்து, உடல் அங்க அடையாளங்களை அறியும் வகையில் பரிசோதனை நடத்தவும் சிறப்பு அனுமதி கோரியிருந்தனர். அதனடிப் படையில் சிறைக் குள்ளேயே பரிசோதனை மேற் கொள்ள அனுமதிக்கப்பட்டது. நீதிமன்ற அனுமதியை அடுத்து புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் குழுவி னர் காலாப்பட்டு சிறைக்கு நேற்று மாலை சென்றனர்.

அங்கு விசாரணை அதிகாரியான முது நிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், கண்காணிப்பாளர் லட்சுமி, முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர் சிவ பிரகாசம் ஆகியோர் முன்னிலையில் சிறை வளாகத்துக்குள் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரின் ரத்த மாதிரிகளை மருத்துவக் குழுவினர் சேகரித்தனர். இருவரது கை ரேகைகளும் தடயவியல் துறையினரால் பதிவு செய்யப்பட்டன.

இது பற்றி போலீஸாரிடம் விசாரித்த போது, “ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, கை ரேகை பதிவு செய்யப்பட்டது. அனைத்தும் கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறை ஆய்வகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதே போல் சிறுமியின் தந்தை, தாய் ஆகியோரிடம் ரத்த மாதிரி எடுக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம். அந்த மாதிரிகளும் இந்த வழக் குக்கு அவசியமாகிறது” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE