தஞ்சை வியாபாரியிடம் 7 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: ராஜஸ்தானைச் சேர்ந்தவர் சர்தாராம்(28). தஞ்சாவூர் நாணயக்கார செட்டித் தெருவில் வசித்து வரும்இவர், மொத்தமாக வெள்ளி நகைகளை விலைக்கு வாங்கி, அவற்றை சிறிய நகைக் கடைகளில் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 கிலோ வெள்ளிப் பொருட்களுடன் இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிள்ளையார் கோயில் பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அவரை வழிமறித்த மூவர், சர்தாராம் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு, அவர் வைத்திருந்த ரூ.2.80லட்சம் மதிப்பிலான கொலுசு, மோதிரம் உள்ளிட்ட 7 கிலோ வெள்ளிப் பொருட்களைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்