சென்னை | மது போதையால் கொலை: 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை புளியந்தோப்பு, குமாரசாமி ராஜாபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (47). கடந்த 3-ம் தேதி இவரது வீட்டினருகே அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (20), அஜித்குமார் (21), சிலம்பரசன் (24), விக்கி (22) ஆகிய 4 பேர் மது போதையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில்,கோபம் அடைந்த சக்திவேல், மது போதை இளைஞர்களைக் கண்டித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கோபத்துடன் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அன்றைய தினம் இரவு சக்திவேல், அதே பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது, பின் தொடர்ந்து வழிமறித்த அதே 4பேர் கும்பல், அரிவாளால் அவரைவெட்டிவிட்டுத் தப்பியது. தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து நவீன்குமார், அஜித்குமார் உள்ளிட்ட 4 பேரையும் கைதுசெய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்