காஞ்சிபுரம்: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெரும்புதூர் போலீஸாரின் மனைவி மற்றும் தந்தை கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூர் பகுதியைச் சேர்ந்தமனோகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனோகரன் ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து போலீஸாராக பணி செய்துள்ளார்.
விஸ்வநாதனிடம் மனோகரன் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால்அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். ரூ. 1 லட்சத்துக்கு ரூ.18 ஆயிரம் வட்டி தருவதாக கூறி மனோகரன் ரூ.66 லட்சம் பணம் பெற்றுள்ளார். இந்தப் பணத்தை மனோகரன், அவரது மனைவி கிரிஜா, தந்தை மதியழகன் ஆகியோரின் வங்கிக் கணக்கு மூலமும், நேரடியாகவும் பெற்றுள்ளார்.
ஆனால் கூறியபடி வட்டி கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப கேட்டபோது ரூ.20 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை திரும்பக் கேட்டபோது அதனை வேறொருவரிடம் முதலீடு செய்துவிட்டதாகவும், அதனை அவர்கள் கொடுத்தால்தான் கொடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஸ்வநாதன் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் மனோகரனை ஏற்கெனவே கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அவரது மனைவி கிரிஜா, மனோகரனின் தந்தை மதியழகனையும் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago