மும்பை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.8.7 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது

By செய்திப்பிரிவு

மும்பை: கடந்த 3 நாட்களில் ரூ.8.7 கோடி மதிப்புள்ள தங்கம் மும்பை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் பயணிகளிடம் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர். இதன்மூலம் 15.89 கிலோ எடையுள்ள தங்கத்தை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.8.7 கோடியாகும்.

இத்தகவலை விமான நிலைய ஆணையரகம் மும்பை சுங்கத்துறையின் 3-வது மண்டலம் வெளியிட்டுள்ளது. பல்வேறு பயணிகளின் ஆடைகள், பெட்டிகள், உடைமைகள், பயணிகளின் உடல் பகுதிகளில் மறைத்து வைத்து இந்த தங்கம் கடத்தி வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மும்பை விமானநிலையத்தில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி மதிப்புள்ள 8 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

8 hours ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்