சென்னை: தண்டையார்பேட்டையில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுகவைச் சேர்ந்த இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுவண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மகேஸ்வரி. இவர், தண்டையார்பேட்டை திருவள்ளுவர் நகர் இளைய முதலி தெருவில் நேற்றுமுன்தினம் இரவு சாலையில் தகராறு செய்து கொண்டிருந்த இருவரை, தடுத்து நிறுத்தி கண்டித்துள்ளார். ஆனால், இரு நபர்களும், மகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்து, மானபங்கம் படுத்தும் வகையில் பேசினராம்.
இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் மகேஸ்வரி புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் மகேஸ்வரியிடம் தகராறு செய்தது திமுகவை சேர்ந்த ரமேஷ், அருண்என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார்அவர்கள் இருவர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago