சிவகங்கை: காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனியார் (மகிழ்ச்சி) நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் பணம் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கிடைக்கும் என விளம்பரம் செய்தது. இதை நம்பி காரைக்குடி, காளையார்கோவில், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் அந்த நிதி நிறு வனத்தில் ரூ.60 கோடி வரை முதலீடு செய்திருந்தனர்.
ஆனால் அந்நிறுவனம் முதிர்வுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்தது. இதையடுத்து அந்நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேர் மீது சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர். இதில் 7 பேரை ஏற்கெனவே கைது செய்த நிலையில், அந்நிறுவன இயக்குநர் ஈரோடு சூரம்பட்டி சிவக்குமார் (46) தலைமறைவாக இருந்தார். அவரை பொரு ளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago