மாநில கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: மாநில கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் சாமுவேல் (20). இவர் மாநிலக் கல்லூரியில் பி.ஏ வரலாறு 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ம் தேதி கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே இவரை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் கத்தியால் தாக்கினர்.

இதில், காயம் அடைந்த சாமுவேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையபோலீஸார் வழக்கு் பதிந்து விசாரணை நடத்தினர்.

அதனடிப்படையில், சாமுவேலை தாக்கியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்