மதுரை: மதுரையில் புதிய மின் இணைப் புக்கு ரூ.17 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரியைச் சேர்ந்தவர் பிரிட்டோ சகாயராஜ். இவர், புதிய வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பு கோரி விளாங்குடி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு பணியில் இருந்த போர்மேன் ஜான் கென்னடி, ரூ.17 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரிட்டோ சகாயராஜ், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் செய் தார்
பின்னர் போலீஸார் ஆலோ சனைபடி, ரசாயனம் தடவிய ரூ.17 ஆயிரத்தை போர்மேன் ஜான் கென்னடியிடம், பிரிட்டோ சகாயராஜ் கொடுத்தார். அப் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்தியசீலன் மற்றும் போலீஸார் ஜான் கென்னடியை கைது செய்த னர். தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago