மதுரை: மதுரையில் பாஜக நிர்வாகி கொலையில் சிக்கிய 3 பேர் தப்ப முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கமுதி அருகே வல்லானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (36). இவர் மதுரை வண்டியூர் சுற்றுச்சாலை குடியிருப்பில் வசித்தார்.
இவர், மாநகர் பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட பொதுச் செயலாளராக இருந்தார். பிப்.15-ம் தேதி அதிகாலை யாகப்பா நகரிலுள்ள தனது அரவை மில்லுக்கு சென்று விட்டு திரும்பினார். அப்போது 5 பேர் கும்பல் அவரைக் கொலை செய்தது.
இதையடுத்து தனிப்படையினர் தேடுதலில் கடச்சனேந்தல் - ஒத்தக் கடை சந்திப்பு சாலையோரத்தில் பதுங்கியிருந்த மதுரை கல்மேடு எல்கேபி நகரைச் சேர்ந்த மருதுபாண்டி (27), அவரது தம்பி ரஞ்சித் குமார்(24) மற்றும் கூட்டாளிகளான அண்ணாநகர் தென்னரசு (21), கடச்சனேந்தல் ஆகாஷ் (27), கோ.புதூர் அகிலன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சக்திவேலின் ஆலையில் வேலை செய்த மருதுபாண்டி என்பவருடன் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்ற பாண்டியன்கோட்டை பிருந்தாநகர் கல்குவாரி பள் ளத்துக்கு போலீஸார் சென்றனர். அப்போது மருதுபாண்டி, ரஞ்சித் குமார், தென்னரசு ஆகியோர் தப்ப முயன்றனர். இதில் தவறி விழுந்து அவர்களது கால்களில் காயம் ஏற்பட்டது. மூவரும் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago