கரூர்/பூந்தமல்லி: கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் வட்டம் லாலாபேட்டை அடுத்தகருப்பத்தூரைச் சேர்ந்த வர் கோபால் (எ) கோபால கிருஷ்ணன்(51). ரவுடியான இவர், 2021 அக். 6-ம் தேதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக லாலாபேட்டை போலீ ஸார் விசாரணை நடத்தியதில், கோபாலுக்கும், அதே ஊரைச் சேர்ந்த ராஜா(36), வயலூர் சரவணன்(26) ஆகியோருக்குமிடையேசமுதாயத் தலைவரின் பதாகைவைப்பது தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டதும், இத னால் ராஜா,சரவணன் ஆகியோர் கூலிப்படையுடன் சேர்ந்து, கோபாலை வெட்டிக் கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ராஜா, சரவணன், சுந்தர், ரவி, ராஜ்குமார், இசக்கி குமார், கார்த்திக், மனோஜ், சுரேஷ்,ஜெயராமன், நந்தகுமார் ஆகி யோரை போலீஸார் கைது செய்த னர். இசக்கிகுமார் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த தால், வழக்கில் இருந்து விலக்கப் பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், குற்றம் சாட்டப்பட்ட ராஜா, சரவணன், சுந்தர்(36), ரவி(26) ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தடயங்களை மறைத்த குற்றத் துக்காக சுரேஷ், நந்தகுமார் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். ராஜ்குமார், கார்த்திக், மனோஜ், ஜெயராமன் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
முன்விரோதத்தில் கொலை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள பட்டாபிராம் அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்(40). இவரது நண்பர் செங்குன்றம் கலியமூர்த்தி(45). இருவரும் 11 ஆண்டுகளுக்கு முன்பு தி.நகரில் உள்ள ஃபைனான்சியரிடம் பணம் பெற்று, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் வாங்க கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கலியமூர்த்தி சரிவர தொழிலில் ஈடுபடாததால், அவருக்குப் பணம் கொடுப்பதை ஃபைனான்சியர் நிறுத்தியுள்ளார். அதேநேரத்தில், பிரபாகரனுக்கு அதிக அளவில் பணம் கொடுத்து வந்துள்ளார். மேலும், கலியமூர்த்தி கடன் கொடுத்தவர்களிடம் பணம்வசூலிக்கும் பணியிலும் பிரபாகரன் ஈடுபட்டுள்ளார்.
இதனால், பிரபாகரனுக்கும், கலியமூர்த்திக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டது. 2013-ல்ஆவடி-விளிஞ்சயம்பாக்கம் ஏரிப்பகுதிக்கு பிரபாகரனை அழைத்துசென்ற கலியமூர்த்தி, நண்பர்களுடன் சேர்த்து அவரைக் கொலைசெய்துள்ளார். இது தொடர்பாககலியமூர்த்தி, திருமுல்லைவாயல் கொளஞ்சி(26), பட்டாபிராம் தாமோதரன்(40) உள்ளிட்ட 7 பேர் மீது ஆவடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்குவிசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் கலியமூர்த்தி, கொளஞ்சி, தாமோதரன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். மேலும், மற்ற மூவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago