அமெரிக்க விசா பெற போலி பட்டப்படிப்புச் சான்றிதழ்கள்: கேரளாவைச் சேர்ந்த பெண் கைது 

By செய்திப்பிரிவு

சென்னை: அமெரிக்க தூதரகத்தில் விசா பெற பட்டப்படிப்பு சான்றிதழ்களை போலியாக தயார் செய்து கொடுத்த கேரளாவை சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து, கணினி மற்றும் போலி சான்றிதழ்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்னர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: சென்னை அமெரிக்க தூதரக Regional Security Officer அளித்த புகாரில், கேரளாவைச் சேர்ந்த அமல் ஷாஜி என்பவர் அமெரிக்கா செல்ல Student F1 Visa கேட்டு விண்ணப்பித்தார். அதன் பேரில் ஜன.30ம் தேதி அமெரிக்க தூதரகத்துக்கு நேர்முகத் தேர்வுக்கு வந்தவரின் ஆவணங்களை சரிபார்த்தபோது மேற்படி அமல் ஷாஜி தாக்கல் செய்த ஆவணங்களான சென்னை பல்கலைக்கழக சான்றிதழ்கள் Bachelor of Computer Application (BCA) போலியாக இருந்தது தெரியவந்தது. மேற்படி சான்றிதழ்களை கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள RISS Royal Academy-ல் தயார் செய்து கொடுத்ததாக அமல் ஷாஜி தெரிவித்ததார். எனவே போலியான சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். அதன் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவில் (Forgery Investigation Wing) வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பின்னர் இவ்வழக்கை விசாரணை செய்ததில், மேற்படி அமல் ஷாஜி என்பவரை விசாரித்ததில் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள RISS Royal Academy என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பெண் ஷாகினா மோல் என்பவர் மேற்படி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்ததாக தெரிவித்தார். அதன்பேரில் மேற்படி பெண் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரிலும், மத்திய குற்றப்பிரிவு அதிகாரி, செந்தில்குமாரி, அறிவுரையின் பேரிலும், மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர், N.S.நிஷா, மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பூமாறன் தலைமையிலான தனிப்படையினர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்று முக்கிய ஷாகினா மோல் (36), பிப்.2-ம் தேதியன்று கைது செய்தனர்.

போலீஸாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஷாகினா மோல் எம்.பி.ஏ படித்துள்ளார். இவர் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் எர்ணாகுளம் கடவந்தர பகுதியில் 2018 முதல் RISS Royal Academy என்ற பெயரில் அலுவலகம் நடத்தி அதில் சென்னை பல்கலைகழகம், அண்ணாமலை பல்கலைகழகம், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைகழகம், கேரளா அரசு பள்ளி சான்றிதழ்கள் மற்றும் பல கல்வி நிறுவனங்கள் வழங்கியது போன்று போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து வந்துள்ளார்.

அப்போது அமல் ஷாஜி என்பவருக்கு சென்னை பல்கலைக்கத்தில் Bachelor of Computer Application (BCA) படித்ததாக போலியாக பட்டப்படிப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை ரூ.60,000 பெற்றுக்கொண்டு தயார் செய்து கொடுத்துள்ளார். தற்போது அதே பகுதியில் RISS Royal Academy என்ற பெயரை மாற்றி EDUWIN Education Distant consultancy என்ற பெயரில் அலுவலக நடத்தி வருவதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து போலியான சான்றிதழ்கள் தயார் செய்ய பயன்படுத்திய கணினியின் 2 CPU, 2 Monitors, 2 key Board, 1 HP Printer, 5 Mobile Phones மற்றும் போலி கல்வி சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட ஷாகினா மோல் நேற்று (பிப்.3) நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்