சென்னை: திருவான்மியூரில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கொலை செய்யப்பட் டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் டெல்லிபாபு (37).இவர் சென்னை மாநகராட்சி 14-வதுமண்டலம் 180-வது வார்டுக்கு உட்பட்ட திருவான்மியூரில், மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார்.
நேற்று மதியம் திருவான்மியூர் அவ்வை நகரில் பணிக்காக வழக்கம்போல வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல் வாகனத்தை வழிமறித்து, டெல்லிபாபுவை அரிவாளால் வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருவான்மியூர் போலீஸார்,டெல்லிபாபு உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கண்ணகி நகர் பகுதியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago