தென்காசி: குற்றால அருவிகளில் குளித்துவிட்டு திரும்பியபோது கார் மீது லாரி மோதியதில், தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பட்டுராஜா என்ற கார்த்திக் (27), வேல் மனோஜ் (29), போத்திராஜ் (28), சுப்பிரமணியன் (27), முகேஷ் என்ற மனோஜ் (27). இவர்கள் மற்றும் முகேஷ் என்ற மனோஜின் அக்கா கணவர் பழனியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன்(30) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு காரில் குற்றால அருவிகளுக்கு குளிக்கச் சென்றனர்.
அருவிகளில் குளித்துவிட்டு நேற்று அதிகாலையில் ஊருக்குதிரும்பிச் சென்றுகொண்டிருந் தனர். சுமார் 3 மணியளவில் புளியங்குடி அருகே சிங்கிலிப்பட்டி-புன்னையாபுரம் இடையே சென்றபோது, எதிரே கேரள மாநிலத்துக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, திடீரென கார் மீது மோதியது.
இதில் கார் உருக்குலைந்தது. காரிலிருந்த 6 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியை ஓட்டிச் சென்ற திருவண்ணாமலை மாவட்டம் முருகபாடியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் காயமடைந்தார்.
தகவலறிந்த தென்காசி எஸ்.பி.டி.பி.சுரேஷ்குமார் மற்றும் போலீஸார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லாரி ஓட்டுநர் பிரகாஷை சொக்கம்பட்டி போலீஸார் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த 6 பேர் விபத்தில் உயிரிழந்தது புளியங்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தென்காசி விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும்வேதனையடைந்தேன். விபத்தில்உயிரிழந்தோர் குடும்பத்தினருக் கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்தஇரங்கல். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2லட்சம் வழங்க உத்தரவிட்டுள் ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago