சென்னை | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: ஓட்டேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட அலுவலகத்தில் திருட்டு நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஓட்டேரி குக்ஸ் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டக் குழு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் புகுந்து, அங்கிருந்த தண்ணீர் மோட்டார், காற்று நிரப்பும் கம்ப்ரசர் மோட்டார்கள், காப்பர் குழாய்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், அலுவலகத்துக்கு வந்த கட்சிப் பிரமுகர்கள் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அக்கட்சியின் திரு.வி.க.நகர் பகுதிச் செயலாளர் செல்வராஜ், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

8 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்