சென்னை: திருவொற்றியூர் பகுதியில் போதைப் பொருட்கள் பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர், கிரிஜா நகர்சாலையில் போதைப் பொருட் கள் விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவொற்றியூர் போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த5 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.அதில் 4.6 கிலோ மெத்தம்பெட்ட மைன், 1.4 கிலோ ஓபியம் என்ற போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நடத்திய விசார ணையில், பிடிபட்டவர்கள் கிரிஜா நகரை சேர்ந்த சுஹேல் அகமது (20), காசிமேடு யாசின் (21), திருவொற்றியூர் ஜெயந்தன் (21), ராஜா (19), தனுஷ் (19) என்பதும், போதைப் பொருட்களை பதுக்கி வைத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago