சேலம் மாநாடு பாதுகாப்புக்கு வந்த காவலர் தற்கொலை முயற்சி

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு நாளை (21-ம் தேதி) நடைபெற உள்ளது. மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கேகே சத்திரம் காவல் நிலைய காவலர் ராஜா (31) பாதுகாப்பு பணிக்காக சேலம் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காவலர் ராஜா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சக காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்