சென்னை | தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சம் கையாடல்: கணக்காளர் உட்பட 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சம் கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோட்டூர்புரம் பாட்டியா பேலஸ் பகுதியில்உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மனிதவள துறையில் மேலாளராக திலகவதி(38)என்பவர் உள்ளார். இவர்,நிறுவனத்தின் கணக்கை சரிபார்த்தபோது, ரூ.15 லட்சத்து11 ஆயிரம்கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குபதிந்து விசாரித்தனர். இதில், அந்தநிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்தபள்ளிக்கரணை யைச் சேர்ந்த யுவன்சங்கர் (23)என்பவர் பணத்தை கையாடல்செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது பெண் தோழியையும் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட யுவன் சங்கர், சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை பல்வேறு பரிவர்த்தனைகளில் தனது மற்றும் பெண் தோழியின் வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

27 mins ago

க்ரைம்

25 mins ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்