சென்னை: புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர்மகேஸ்வரி. இவர் புகாரின்பேரில் அதே பகுதியில் உள்ள பூமி ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள மைதானத்தில் இரவில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மது அருந்திக் கொண்டிருந்த 20 பேரை அங்கிருந்து கலைந்து செல்லும்படி எச்சரித்தார்.
இதனால் கோபம் அடைந்த அவர்களில் சிலர் `நாங்கள் வழக்கறிஞர்கள், இங்கு அமர்ந்து தான் மது அருந்துவோம்' எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். இதை உதவிஆய்வாளர் மகேஸ்வரி தனது செல்போனில்படம் பிடித்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் செல்போனை பிடுங்க முயன்றனர். போனை கொடுக்காததால் உதவி ஆய்வாளரை ஒருமையில் பேசி, தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
பின்னர், மகேஸ்வரி தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
17 mins ago
க்ரைம்
15 mins ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago