புதுடெல்லி: ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டம் குண்டலி எல்லை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் டெல்லியைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்றிரவு 11.30 மணிக்கு நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் வடமேற்கு மாவட்டத்தில் சிறப்பு பணிக்காக அமர்த்தப்பட்ட ஆய்வாளர் தினேஷ் பெனிவால் மற்றும் ஆதர்ஸ் நகர் காவல்நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட ஏடிஓ ஆய்வாளர் ரன்வீர் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் காரில் சோனிபட் வீட்டுக்கு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த ஆய்வாளர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹரியாணா போலீஸார் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் போலீஸார் சென்ற கார் பனிமூட்டம் காரணமாக சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago