இன்ஸ்டாகிராமில் வெளியிட கார் ஓட்டியபடி வீடியோ எடுத்தபோது விபத்து: தாய், மகன் உட்பட 4 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஜெய்சால்மர்: இளைஞர்கள் சிலர் மதுபோதையில், கார் ஓட்டியபடி இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்காக வீடியோ எடுத்ததால் விபத்தில் சிக்கி தாய்,மகன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு ஜெய்சால்மர் பகுதியிலிருந்து பார்மர் நோக்கி காரில் வேகமாக சென்றனர். அவர்கள் காரில் வேகமாக செல்வதை வீடியோ எடுத்துஇன்ஸ்டாகிராமில் பதிவிட விரும்பினர். அப்போது ஜெய்சால்மர் மாவட்டத்தின் தேவிகோட் என்ற இடத்தில்மனீஷ் (13) என்ற சிறுவனும், அவரது தாய் மென்கலா என்பவரும் ரோட்டை கடந்து சென்றனர். மிக வேகமாக வந்த கார், ரோட்டைகடந்து சென்ற இருவர் மற்றும் பசுமாடு மீது மோதியபின் மற்றொரு கார் மீது மோதி நின்றது.

இந்த பயங்கர விபத்தில் தூக்கிவீசப்பட்ட மனீஷ், மென்கலா மற்றும் குடிபோதையில் காரில் பயணம் செய்த ரோஷன் கான், பவானி சிங் ஆகியோர் உயிரிழந்தனர். ரோட்டை கடக்கும்போது காரில் அடிபட்ட பசுமாடும் உயிரிழந்தது. இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் பயணம் செய்த இருவர் காயம் அடைந்தனர்.

குடிபோதையில் காரை ஓட்டியடிரைவரும், காரில் பயணம் செய்தமற்றொரு நபரும் உயிர் தப்பினர்.இதுதொடர்பாக ஜெய்சால்மர்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேகமாக சென்ற கார் ஏற்கெனவே போலீஸார் அமைத்திருந்த தடுப்பில் நிற்காமல் சென்றுள்ளது. மது போதையில் கார் ஓட்டிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்