ஓட்டேரியில் இளைஞர் மர்ம மரணம்: போதை ஊசியால் உயிரிழப்பா என விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: ஓட்டேரியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் போதை ஊசியால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: வியாசர்பாடி, எம்.எம்.கார்டன், 3-வது தெருவைச் சேர்ந்தவர் தீபக் ( 23 ). இவர் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.எஸ்.மூர்த்தி நகர், பின்னி மைதானத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் வருவது போல் இருந்துள்ளது. இதையடுத்து, செல்போனில் நண்பர் செல்வம் என்பவரை சம்பவ இடத்துக்கு வரும்படி அழைத்துள்ளார்.

செல்வம் அங்கு சென்ற போது தீபக் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் அருகே 2 ஊசிகள் கிடந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீபக்கை புளியந்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஓட்டேரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இயற்கை மரணம் அடைந்தாரா? அல்லது போதை ஊசி மூலம் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்