கூலிப்படையை ஏவி முதியவர் கொலை வழக்கில் 7 பேர் கைது; நொய்யல் ஆற்றில் சடலம் மீட்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே கூலிப்படையை ஏவி முதியவரை கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு வாரத்துக்குப் பின் நொய்யல் ஆற்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே காளிவலசு கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (80). இவருடைய மனைவி ராஜலட்சுமி (75). தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சோம சுந்தரத்துக்கு அதே பகுதியில் சொந்தமாக 30 ஏக்கர் நிலம் உள்ளது. சோம சுந்தரத்தின் சகோதரி சொர்ணாத்தாளின் மகனான கொற்ற வேல் (50) என்பவருக்கும், சோம சுந்தரத்துக்கும் பல ஆண்டுகளாக நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்தது.

தன்னிடம் இருந்து கொற்றவேல் அபகரித்த நிலத்தையும், நீதிமன்ற வழக்கு மூலம் சோம சுந்தரம் திரும்பப் பெற்றார். இந்நிலையில், தனது தோட்டத்தில் பணிபுரியும் பழனிசாமி (58) என்பவருடன் இவ்விவகாரம் தொடர்பாக கொற்றவேல் விவாதித்துள்ளார். பழனிசாமி யோசனையின் படி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் (38) என்பவரிடம், சோம சுந்தரத்தை கொலை செய்தால் ரூ.5 லட்சம் தருவதாக கொற்றவேல் கூறியுள்ளார்.

இதையடுத்து, கடந்த 26-ம் தேதி மகனுக்கு பெண் பார்க்க அழைத்துச் செல்வதாகக் கூறி சோம சுந்தரத்தை ஈரோடு மாவட்டத்துக்கு கொற்றவேல் அழைத்துச் சென்றார். அங்கு, சிதம்பரம் தலைமையிலான கூலிப் படையினர், சோம சுந்தரத்தை கொலை செய்தனர். சடலத்தை நொய்யல் ஆற்றில் வீசிச் சென்றனர். சோம சுந்தரம் மாயமானதாக அவரது மகன்கள் அளித்த புகாரின் பேரில் காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், சோமசுந்தரம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கொலை வழக்கு பதிந்து, கொற்ற வேல் (57), அவரது மனைவி விசாலாட்சி (44), கூலிப் படையை சேர்ந்த சிதம்பரம் (38), இவரது 15 வயது மகன், முருகேசன் (64), இவருடைய மனைவி விஜயா (57), பழனிசாமி (58) ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின்படி, நொய்யல் ஆற்றில் முதியவரின் சடலத்தை தேடும் பணியில் போலீஸாரும், காங்கயம் தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டனர். ஒரு வாரத்துக்குப் பின் முதியவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்