ஈரோடு: சித்தோடு அருகே நேற்று காலை நடந்த சாலை விபத்தில் 6 மாத குழந்தையுடன் தாய் உயிரிழந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் மணி வண்ணன் ( 30 ). தையல் கலைஞர். இவரது மனைவி சுபாஷினி. நேற்று அதிகாலை திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் 4 வயது மகன் மற்றும் 6 மாத பெண் குழந்தையுடன் பயணித்துள்ளார். கோவை - சேலம் நான்கு வழிச்சாலையில், சித்தோட்டை அடுத்த பேரோடு பிரிவு அருகே சென்ற போது, இவரது இருசக்கர வாகனத்தை, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் வேகமாக கடந்து சென்றது.
அப்போது வேகமாக காற்று வீசியதால், இருசக்கர வாகனத்தில் சென்ற மணிவண்ணன் தடுமாறி கீழே விழுந்தார். இதில், மணி வண்ணனும் இரு குழந்தைகளும் சாலையின் இடது புறத்திலும், சுபாஷினி சாலை யின் வலது புறத்திலும் விழுந்தனர். சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஏறியதில், சுபாஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையின் மறுபுறம் விழுந்த 6 மாத குழந்தையும் காயமடைந்து உயிரிழந்தது.
விபத்தில் காயமடைந்த மணி வண்ணன் மற்றும் அவரது 4 வயது குழந்தையை சிகிச்சைக்கு அனுப்பிவைத்த சித்தோடு போலீஸார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago