வாராணசி ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

ஷாஜஹான்பூர் (உத்தர பிரதேசம்): வாராணசியில் உள்ள ஐஐடி (பிஎச்யு-பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி) கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக ஐடி நிர்வாகிகள் என்று கூறப்படும் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புகார் மனுவில் கூறப்பட்டுள்ளபடி, கடந்த நவம்பர் 1-ம் தேதி இரவு ஐஐடி மாணவி ஒருவர் தனதுநண்பர்களுடன் கர்மன் பாபா கோயிலுக்கு சென்றுள்ளார். மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று பேர் அந்த ஐஐடி மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர். அந்த பெண்ணின் ஆடைகளைகளைந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்த அந்தகும்பல் பாலியல் வன்கொடு மையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் மீது ஐபிசி 354 பிரிவு மற்றும் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குணால் பாண்டே, ஆனந்த் என்றஅபிஷேக் சவுகான் மற்றும் சக்சம் படேல் ஆகிய 3 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரும் பாஜகவின் ஐடி பிரிவு நிர்வாகிகள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆளும் பாஜகவினர் ஆதரவின் காரணமாக குற்றம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகே உ.பி. போலீஸார் இந்தவழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், வாராணசியில் உள்ள பிரதமர் மோடியின் எம்.பி. தொகுதி அலுவலகத்தை தொண்டர்களுடன் இன்று முற்றுகையிட போவதாக உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அறிவித்துள்ளார்.

ஏபிவிபி அமைப்பின் ஊடகஒருங்கிணைப்பாளர் அபினவ் மிஸ்ரா கூறுகையில், “ இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும்,இரண்டு மாதங்கள் குற்றவாளிகளை பாதுகாத்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐஐடி வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கையை பிஎச்யு நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE