மகாராஷ்டிரா | புத்தாண்டு கொண்டாட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்பாடு - சுமார் 100 பேரிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

தானே: மகாராஷ்டிராவின் தானே நகரில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் சட்டவிரோத போதைப் பொருள் பயன்படுத்திய சுமார் 100 பேரை போலீசார் பிடித்து வைத்துள்ளனர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

தானே நகரின் வடவாலி க்ரீக்குக்கு அருகே திறந்த வெளியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள் சட்டவிரோத போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் தடை செய்யப்பட்ட எல்எஸ்டி, சார்ஸ், உற்சாகமூட்டும் மாத்திரைகள், கஞ்சா போன்ற போதை பொருள்களை பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோத போதைப் பொருட்களைப் பயன்படுத்திய சுமார் 100 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தானே நகர துணை காவல் ஆணையர் சிவராஜ் பாட்டில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தேஜாஸ் கபுல், சுஜால் மஹாஜன் ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். மகாராஷ்டிராவுக்கு வெளியே உள்ள சிலருக்கு இதில் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் மற்றும் பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்கள்தான் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்