நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 48 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 100 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் 42 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 222 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,424 கிலோ குட்கா, ரூ. 5,99,628 பணம் மற்றும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. 29 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
44 கடைகளுக்கு 2,20,00 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 102 நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க போக்சோ சட்டம் குறித்து குமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாவட்ட காவல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக எஸ்பி அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago