பாஜக எம்.பி-யின் சகோதரர் கைது @ கர்நாடகா

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநில மைசூரு-குடகு மக்களவை தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர் விக்ரம் சிம்ஹா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மாநில வனத்துறையினர் கைது செய்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்களை வெட்டி, கடத்தியது அவர் மீதான குற்றச்சாட்டு.

அந்த மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள நந்தகொண்டனஹல்லி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனை அந்த கிராமத்தில் கள ஆய்வு செய்த தாசில்தார் அடையாளம் கண்டார். தொடர்ந்து இந்த விவரத்தை வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 126 மரங்களை அவர் வெட்டியதாக அம்மாநில வனத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் அத்துமீறலில் ஈடுபட்டு வண்ண புகை வீசிய கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த மனோரஞ்சன், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மாவுக்கு பாஸ் வழங்கி இருந்தது பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா தான். இது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்