மானாமதுரை | லாரி ஓட்டுநர் கொலையில் மனைவி, மகன் கைது: 2 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

மானாமதுரை: மானாமதுரை அருகே லாரி ஓட்டுநர் கொலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி, மகன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் மானா மதுரை மூங்கில் ஊருணியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சதுரகிரி (42). இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரை காணவில்லையென அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீஸார் வழக்கு பதிந்தனர். அப்போது சதுரகிரியின் மனைவி ராதிகாவிடம் (40) போலீஸார் விசாரித்தபோது வெளியூரில் தங்கி லாரி ஓட்டி வருவதாகவும், ஆனால் தங்களிடம் பேசுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சதுரகிரி மகன் துரைசிங்கத்தை (20) ஒரு வழக்கு தொடர்பாக போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது தனது தந்தையை 2 ஆண்டுகளுக்கு முன் தானும், தனது தாயாரும் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் விசாரணையில் இந்த கொலையில் மொத்தம் 9 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிளங்காட்டூர் கண்மாயில் புதைக்கப்பட்டிருந்த சதுரகிரி உடலின் எலும்புகளைத் தோண்டி எடுத்து மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் கொலையில் தொடர்புடைய ராதிகா, துரைசிங்கம், ரயில்வே காலனியைச் சேர்ந்த அங்காளபரமேஸ்வரி (31) வளநாட்டைச் சேர்ந்த சந்தோஷ் (29), கிளங்காட்டூரைச் சேர்ந்த ராசையா (27) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சதுரகிரி மனைவி ராதிகா, அவரது தோழி அங்காள பரமேஸ்வரி ஆகிய இருவரும் கிளங்காட்டூரைச் சேர்ந்த நாகர் என்பவருடன் பழகி வந்தனர். இதனால் சதுரகிரி குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

2 ஆண்டுகளுக்கு முன் ராதிகா, தனது மகன் துரைசிங்கம், நாகர், பரமேஸ்வரி உட்பட 9 பேர் சேர்ந்து சதுரகிரியை அடித்து கொலை செய்தனர். பின்னர் உடலை எரித்து கிளங்காட்டூர் கண்மாயில் புதைத்தனர்.

மற்றொரு வழக்கில் துரை சிங்கம் சிக்கியபோது, அவரது தந்தை குறித்து விசாரித்தோம். அப்போது சதுரகிரியை கொலை செய்ததாக தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

8 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்