ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர் நாயக் (28). 2012-ல் ஒரு கொலை வழக்கில் கைதாகி உள்ளார். விடுதலையான பின்னர், சில இடங்களில் வேலை பார்த்துள்ளார். இவரது சிறை வாழ்க்கை குறித்து அறிந்ததும் வேலை பறிபோய் உள்ளது.
இதனால் பூட்டி இருக்கும் வீடுகளில் திருட தொடங்கி உள்ளார். திருடிய பணத்தில். ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்துள்ளார். சங்கர் நாயக் ஒருமுறை திருட்டு வழக்கில் கைதாகி உள்ளார். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர், போலீஸில் புகார் அளிக்கையில் திருடு போன நகை எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறியுள்ளார்.
இதனால், அதற்கு அடுத்து திருடும் ஒவ்வொரு வீட்டிலும், தான் எவ்வளவு பணம், நகை திருடினேன் என்பதை ஒரு காகிதத்தில் துண்டுச் சீட்டாக எழுதி வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் என ஹைதராபாத் போலீஸார் தெரிவித்துள்ளனர். சங்கர் நாயக் மீது 100-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஹைதராபாத் அமீர்பேட் என்ற இடத்தில் இவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago