கோவை: முதல்வரின் சிறப்பு பிரிவு போலீஸ் எனக்கூறி, கோவையில் தொழிலதிபரை காரில் கடத்தி பணம் பறித்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் 5-வது வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (44). தொழிலதிபர். மேட்டுப்பாளையம் சாலையில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சரவணம்பட்டி போலீஸாரிடம் அளித்த புகாரில், “கடந்த 15-ம் தேதி காலை எனது கார் ஓட்டுநர் ஆனந்த நாராயணனுடன், அடையாளம் தெரியாத 8 பேர் வந்திருந்தனர்.
தாங்கள் முதல்வரின் சிறப்பு பிரிவு போலீஸார் எனக்கூறி என்னையும், ஓட்டுநர் ஆனந்த நாராயணனையும் வலுக்கட்டாயமாக அவர்கள் வந்த காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். காரின் முன் இருக்கையில் எனக்கு தெரிந்த கார்த்திக் என்ற நபர் அமர்ந்திருந்தார். எங்களை திண்டுக்கல் மாவட்டத்துக்கு கடத்திச் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால் விடுவிப்பதாக மிரட்டினர்.
என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறினேன். இறுதியாக ரூ.5 லட்சம் தருமாறு கேட்டனர். நான் தெரிந்தவர்கள் மூலம் ஏற்பாடு செய்து அவர்களிடம் ரூ.5 லட்சத்தை அளித்தேன். அதன் பின்னர், மர்ம நபர்கள் என்னையும், ஆனந்த நாராயணனையும் ஓரிடத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். எங்களை கடத்திய கார்த்திக் உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
» மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல்: அதிமுக எம்எல்ஏ, மனைவி மீது வழக்கு பதிவு
» சென்னை | கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
அதன் பேரில், கடத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் கார்த்திக் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
8 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago